மத்யமர் மீட், சில சிந்தனைகள்😜
வழக்கமான மதிய சாப்பாட்டிற்கப்பறம் , உண்ட களைப்பு தொண்டருக்குமுண்டு என்ற சொல்லுக்கிணங்க , உறக்கமுமில்லாத விழிப்புமில்லாத ஒருவித பரவச நிலை அனுபவித்த பின்
என்னுடைய ஆப்டர்னூன் காப்பி ப்ரேக் வந்தது. காபியும் வந்தது. காப்பியை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஜென் துறவி போல அனுபவித்து பருகிக் கொண்டே யோசனயில் ஆழ்ந்தேன்.
இப்ப சில நாட்களாக எங்க பாத்தாலும் இந்த மத்யமர் மீட் பற்றியே பல தொடர்புகள்( அதாவது நண்பர் நண்பரல்லாதவர் என்று இன்னும் பிரித்தறியப்படாதவர்கள்) பேசிக் கொண்டிருப்பதால்
எனது சிந்தனையும் இந்த மத்யமர் பற்றியே சுற்றிச் சுற்றி வந்ததில் வியப்பொன்றுமில்லை.
இதில் பலரும் பலவிதமாக அவரவர் வருகை, எதிர்பார்ப்பு, தங்கள் விநோத விபரீத talent (சட்டுனு தமிழ் வார்த்தை வரல) இப்பிடி பலவற்றையும் பகிர்ந்து கொண்டது என்று எல்லாத்தையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பத்தான் பளிச்சினு ஒண்ணு தோணித்து. இந்த மீட்டுக்கு வர மத்யமரோட சராசரி வயது ( average mean age) என்னவாயிருக்கும்னு எண்ணிப் பார்த்தேன். அது ஒரு 38லிருந்து 65க்குள்ளாக இருக்குமோ என்று தோன்றியது. சிறு வயது,அல்லது, வாலிப வயதெனும் 18,19லிருந்து ஒரு 28,29 வயதுக் காரர்கள் மிக மிக குறைவானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. அப்படியானால் இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். இப்படி யோசித்ததன் விளைவு இன்று மத்யமர் குழுவில்
அங்கத்தினர்களாக இருப்பவர்களின் சராசரி வயதே இந்த வகையாகத்தானிருக்குமோ என்று தோன்றியது. இது சரிதானா இல்லையா என்பதை மத்யமர் குழு நிர்வாகிகள்தான் கண்டறிய முடியும். இது தேவைதானா அவசியமா என்பதும் அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும். இது பற்றி மற்ற குழு நண்ணபர்களின் கருத்தை அறிய ஆவலுடனிருக்கிளேன்.
ம், பட்டாசைக் கொளுத்திப் போட்டாச்சு ,வெடிக்குமா,இல்லை, புஸ்வாணமா, காத்திருந்து பாக்க ணும்😂🤣😂🤣🤓
No comments:
Post a Comment