மனமிரங்காவிடில்.......
பல்லவி
மனமிரங்காவிடில் மகாலக்ஷ்மி
மார்க்கம் வேறறியேன் தாயே நீயே
அனுபல்லவி
உனதருள் இல்லையேல் அன்னையே
எங்கு செல்வேன் எவரிடம் முறையிடுவேன்
சரணம்
தனக்குவமை இல்லாதான் கேசவன் மணிமார்பில்
இணக்கமுடன் கொலுவிருக்கும் தேவி கனகவல்லி
பிணக்கமின்றி சேயெனையே ஆண்டருள்வாயே
இணையடி பணிந்தேன் சரணம் சரணம்
No comments:
Post a Comment