மீனாக்ஷி ....
பல்லவி
மீனாக்ஷி உன்றன் கழலடி பணிந்தேன்
என்னை இனிது ஆட்கொள்ள வேண்டி - மதுரை
அனுபல்லவி
ஞானசேகரன் ஆலவாயழகன்
தானாகவே வந்து காதல் மணம் புரிந்த
சரணம்
தஞ்சமடைந்தேன் அங்கையற்கண்ணி
அஞ்சலென்று அபயகரம் நீட்டி
வஞ்சனையின்றிப் பரிந்தருள் புரிவாய்
அஞ்சுகமே சென்னகேசவன் சோதரி
தாளம்: கண்ட திரிபுடை
No comments:
Post a Comment