தாமரைப் பூவிலமர்.....
பல்லவிதாமரைப் பூவிலமர் மகாலக்ஷ்மி உன்றன்
அரவிந்த மலர்ப் பதம் அனுதினம் பணிந்தேன்
துரிதம்
நாமகள் மலைமகள் நான்முகன் நாரதர்
இந்திரன் சந்திரன் குபேரன் வணங்கும்
அனுபல்லவி
பாமரர் பண்டிதர் நர்ர் சுரர் துதித்திடும்
மாமறை போற்றும் கேசவன் மனம்கவர்
சரணம்
திருப்பாற்கடல் தனிலெழுந்தருளி
திருமால் மணிமார்பில் வீற்றிருந்து
அருட்காட்சி யளித்திடம் அலைமகளே
கருணைக் கடலே அம்புஜவல்லி
No comments:
Post a Comment