உன் பதமொன்றே துணை
பல்லவி
உன் பதமொன்றே துணை கேசவா
என் கவலை குறை அனைத்தும் நீங்கிட
அனுபல்லவி
மென் மலர்ப் பதத்தாள் சீதையின் நாயகனே
அன்னை கோசலையின் மனங்கவர்ந்த பாலகனே
சரணம்
தென்னிலங்கை சென்று தசகண்டன் சிரம் கொய்த
மன்னுபுகழ் ராகவனே அயோத்தியர் கோமானே
முன்வினைப் பயன்களால் யான் படுந்துயரங்கள்
தன்னால் விலகிடவும் நன்மைகள் பெருகவும்
No comments:
Post a Comment