அஞ்சனை மைந்தன்
பல்லவி
அஞ்சனை மைந்தனை ஆஞ்சநேயனை
தஞ்சமடைந்தேன் சஞ்சலம் களைந்தேன்
அனுபல்லவி
வஞ்சனையில்லாத வாயுகுமாரனை
நெஞ்சில் கேசவனை சுமந்திருக்கும் மாருதியை
சரணம்
செஞ்சுடரோனை உண்ண முயன்றவனை
வெஞ்சமரில் வீழ்ந்த இளையவனுயிர் காக்க
சஞ்சீவினியைக் கொண்டு வந்த அனுமனை
பஞ்சவர்க்குத் துணையாகக் கொடியிலமர்ந்தவனை
No comments:
Post a Comment