வேத முதல் காரணன்.......!!!
"சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
-கம்பராமாயணம் ( 9837 )
வேதமுதல்வனை சீதாராமனை *
பல்லவி
வேதமுதல்வனை சீதாராமனை
பாதம் பணிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
நாதப்ரும்மம் பாடலில் போற்றிடும்
மாதவனை மதுசூதனனைக் கேசவனை
சரணம்
யாதவகுலத்தில் கண்ணனாய் உதித்தவனை
கோதண்டமேந்தி குவலயம் காக்க
பாதகம் செய்திடும் அரக்கரை அழித்தவனை
பூதலம் போற்றும் ஆதவகுலத்தோனை
No comments:
Post a Comment