திருமாலே
பல்லவி
எங்கிருந்தாலும் நீ எனக்கருள வேண்டும்
சங்கொடு சக்கரம் ஏந்தும் திருமாலே
அனுபல்லவி
பங்கயநாபனே பாற்கடல்வாசனே
செங்கமலம் மார்பிலுறை சென்னகேசவனே
சரணம்
சங்கரரும் நரர்சுரரும் நாரதரும் நான்முகனும்
திங்களும் ஞாயிறும் கரம் பணிந்தேத்தும்
பங்கய பாதனே பரமபதநாதனே
முங்கிடச்செய்யும் பவக்கடல் கடந்திட
No comments:
Post a Comment