கதி நீயே சீதாபதி
பல்லவி
கதி நீயேயெனத்துதித்தேன் சீதாபதியே
புதிரான வாழ்வில் எனக்கருள வேண்டியே
அனுபல்லவி
இதிகாச புராணங்கள் போற்றும்
அதிலாவண்ய மதிமுகத்தோனே
சரணம்
நிதியென ரகுகுலம் போற்றும் கேசவனே
அதிபதியாய் விளங்கும் அயோத்தியின் பதியே
ரதிபதி சுரபதி சரச்வதியின் பதி
மதித்துப் பணிந்திடும் பூபதியே ராகவனே
No comments:
Post a Comment