கேசவன் நீயிருக்க
பல்லவி
கேசவன் நீயிருக்க வேறொரு தெய்வம்
காசினியில் எனக்கில்லை திருமலைவாசா
அனுபல்லவி
வாசமலர் சூடும் பத்மாவதியும்
நேமுடன் அலமேலு மங்கையும் உடனிருக்கும்
சரணம்
ஈசன் உனக்கிணை இவ்வுலகில் யாருளார்
மாசற்ற மணிவிளக்கே திருவேங்கடமுடையானே
வாசவாதியரும் முனிவரும் நான்முகனும்
பூசுரரும் நாரதரும் அனைவரும் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment