தரிசனமொன்றே போதும்
பல்லவி
தரிசனமொன்றே போதும் கேசவா
பரிவுடன் காட்சி தரும் உனது திருவடி
அனுபல்லவி
சரிசமானமாய் ஒருவருமில்லாத
அரிநாராயணனே ஆதிமூலமே
சரணம்
அரியாசனம் பதவி பொருள் புகழ் வேண்டேன்
அரிதாய்ப் பெரிதாய் எதுவும் வேண்டேன்
மரித்தலும் பிறத்தலும் இல்லாதொழித்து
கரிசனத்துடனே எனைக்காத்தருளவே
No comments:
Post a Comment