ஆராவமுதே
பல்லவி
ஒருநாளும் உனதிரு திருவடி மறவாத
ஏழையெனக்கருள்வாய் திருமாலே கேசவா
அனுபல்லவி
தருமநெறி காக்க அவதாரமீரைந்து
தரணியிலெடுத்த பெருமைக்குரியவனே
சரணம்
அருமறைகள் போற்றும் கருணைக் கடலே
திருவின் நாயகனே தீனசரண்யனே
திருக்குடந்தை வளர் சாரங்கபாணியே
அருந்தேனே கனியே ஆராவமுதே