பரிமளரங்கன்
பல்லவி
பந்துவும் தோழனும் நீயே கேசவா
உந்தன் பதமே சதமெனப் பணிந்தேன்
அனுபல்லவி
நிந்தை புரிந்திடும் நீச அரக்கருக்கும்
உன் தயை நல்கிடும் கருணாகரனே
சரணம்
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
வந்தனை புரிந்துனை அனுதினம் துதித்தேன்
சந்ததம் துதித்திடும் பக்தருக்கருளும்
இந்தளூர் தலத்துறை பரிமளரங்கனே
No comments:
Post a Comment