சரணம் நரசிம்மா
பல்லவி
அனைத்தும் நீயென்றே அடி பணிந்தேன்
உனக்கிணை யாருளார் நரசிம்மா
அனுபல்லவி
முனைப்புடனுனைத்துதிக்கும் அடியவர்க்கெல்லாம்
வினைப்பயன் நீக்கி அருளளிப்பவனே
சரணம்
தந்தையும் தாயும் குருவும் தோழனும்
பந்துவும் செல்வமும் சுற்மும் நீயே
விந்தை வடிவில் சிம்மமாய் நரனாய்
இந்தத்தரணியில் காட்சியளித்திடும்
No comments:
Post a Comment