இடகுஞ்சி கணபதி
பல்லவி
கடைக்கண்ணருளொன்றே போதும் கணேசா
தடையின்றிக் கருமங்கள் சிறப்புடன் நடைபெற
அனுபல்லவி
படைத்தல் காத்தல் அழித்தலனைத்தையும்
விளையாட்டாய் நடத்திடும் வேழமுகத்தோனே
சரணம்
விடைவாகனன் மகனே வேதமுதல்வனே
இடைக்குலத்துதித்த கேசவன் மருகனே
இடகுஞ்சி கணபதியே இடர்பிணி களைவோனே
அடைக்கலம் நீயே ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment