அரங்கா சரணம்
பல்லவி
நாவாயிரம் போதாது அரங்கா உனைப்பாட
ஏவாமலெனக்கருளும் ஆதி கேசவா
அனுபல்லவி
காவாவாவென்று அழைக்காமல் காத்தருளும்
தேவாதி தேவா திருவரங்கத்தம்மா
சரணம்
மூவாசைப்பிணி போக்கும் முன் வினைப் பயன் நீக்கும்
தேவாதி தேவா ஶ்ரீ வாசுதேவா
பாவாணரும் போற்றும் பாற்கடல் வாசா
மாவாய் பிளந்தவனே மாதவனே முகுந்தா
No comments:
Post a Comment