வீர ராகவன்
பல்லவி
அற்புதமே அழகே அயோத்தியின் கோமானே
பொற்பதம் பணிந்தேன் அற்பனெனக்கருள்வாய்
அனுபல்லவி
விற்கலை வேந்தனே வீர ராகவனே
கற்புக்கரசி சீதையின் நாயகனே
சரணம்
சொற்களுக்கடங்காத நற்குணங்களுடையவனே
கற்பனைக் கெட்டாத பேரழகே கேசவனே
சிற்பரனைப் பணிந்த தயரதன் மைந்தனே
நற்கதி வேண்டியே நாளுமுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment