சகஸ்ரநாமம்
பல்லவி
ஆயிரம் நாமம் கொண்ட ஆதிகேசவனை
வாயாரப் பாடி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஞாயிறும் திங்களும் கண்களாய் விளங்கும்
நேயனை நிமலனை அரங்கநகர் வாசனை
சரணம்
தாயினும் மிகுந்த பரிவுடன் காப்பவனை
நோயெனும் பவப்பிணி நீங்கிடச் செய்பவனை
தோயம் தனிலுறங்கும் பாற்கடல் வாசனை
ஆயர் குலத்துதித்த மாயனை மதுசூதனனை
No comments:
Post a Comment