புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன்
பல்லவி
செல்வத்திருமகளைத் திருமார்பில் வைத்திருக்கும்
வல்வில் ராமனுனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வல்லரக்கர் குலமழித்த அயோத்தியர் கோமானே
சொல்லுக்கடங்காத வடிவழகே ரகுராமா
சரணம்
இல்லாத பொருளென்று இல்லாத கேசவனே
எல்லாமும் நீயே என்றறிந்த பின்னாலே
நல்லவனே எந்தன் அறியாமை தனையே
கல்லாமூடன் யான் காணிக்கையாயளித்தேன்