கோவிந்தனை நினை மனமே…….
பல்லவி
கோவிந்தனை நினை மனமே
மூவாசைப்பிணி போக்கும் முன்வினை பயன் நீக்கும்
அனுபல்லவி
தேவாதிதேவனைக் கேசவனை மாதவனை
நாவாரப்பாடி மனமாரத்துதித்து
சரணம்
ஆவினங்கள் மேய்க்கும் கண்ணனை அச்சுதனை
தேவருக்கமுதளித்த திருமாலை முகுந்தனை
மூவருக்கும் முதல்வனை முழுமுற்கடவுளை
காவாயென வேண்டி கரம் கூப்பி வணங்கி
No comments:
Post a Comment