“பாடல் கண்டேன் பாடல் புனைந்தேன்”
எழில் கொண்ட…..
பல்லவி
எழில் கொண்ட உன்னியவன் பதம் காண
விழைந்ததன்றி வேறெதுவும் வேண்டேன்
அனுபல்லவி
குழலேந்திய குருவாயுரப்பனைக்கேசவனை
மழலையில் வெண்ணையுண்ட வாயனை
சரணம்
சுழல் சக்கரமேந்திய ஶ்ரீமன் நாராயணனை
ஆழியில் கிடந்துறங்கும் கேசவனை மாதவனை
அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் பிரமனும்
தொழும் வண்ணம் பிரதாபமுடையவனை
*****
சோதியுடற் சார்த்திய தூவெண்ணெய் நாற்றமுடன்
பாதவெழில் காணப் பரிதவிக்கும் பக்தியுடன்
ஊதுகுழ லேந்திய உன்னியவன் சந்நிதியில்
ஏதெனக்கு வேண்டுவேன் சொல்?**
** வரைபடம் கவிதை ‘வித்யாசுப்பிரமணியம்’
No comments:
Post a Comment