நமச்சிவாய ……
பல்லவி
நமச்சிவாய என்னும் மந்திரம் தன்னையே
சதா இனி என் நாவில்
அனுபல்லவி
இமவான் மகள் உமையவள் நாதன்
கேசவன் நேசன் ஈசனைப் பணிந்து - ஓம்
சரணம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
குமரன் கணபதி நந்தியும் பணியும்
அமிர்தகடேச்வரனைக் காலகாலனை
எம பயம் நீங்கவும் நல்வாழ்வு பெறவும்