கரும்பு வில்லும் …..
பல்லவி
கரும்பு வில்லும் பாசாங்குசமும்
கையிலேந்தும் காமாக்ஷியைத் துதித்தேன்
துரிதம்
திருமாலீச்வரன் சுகசனகாதியர்
பிரமன் நாரதர் நரர் சுரரிந்திரன்
நந்தி கணங்கள் கந்தன் கணபதி
வந்தனை புரிந்திடும் லலலிதாம்பிகையை
அனுபல்லவி
விரும்புவோர் விரும்பும் வரங்களைத் தருபவளை
அருமாகடலமுதன் கேசவன் சோதரியை
சரணம்
திருமகள் கலைமகள் கவரி வீச
திருச்சக்கரம்தனிலமர்ந்திருப்பவளை
வருமிடர் பவப்பிணி களைந்திடுமீச்வரியை
பெருமை மிகு காஞ்சியில் வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment