சிவனின் மனதை……
பல்லவி
சிவனின் மனதைத் தன் சிரிப்பிலடக்கிய
சிவகாமேச்வரியை ஶ்ரீலலிதையைத் துதித்தேன்
அனுபல்லவி
பவள வாயும் முத்துப் பல் வரிசையும்
உவகை பொங்கும் கமல முகமும் கொண்ட
சரணம்
தவமுனிவர்களும் சுகசனகாதியரும்
அவனியோரனைவரும் துதித்துப் போற்றும்
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் சோதரியை
குவலயம் கொண்டாடும் ராஜராஜேச்வரியை
श्री ललितासहस्रनामम्।
नामम् 28
ॐ मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसायै नमः ।
Meaning :
Obeisance to the Goddess,who submerges even the mind of Kamesha(Lord shiva) in the radiance of her smile.
ஸ்மிதா என்றால் புன்னகை என்றும், மந்தஸ்மிதா என்றால் ஒரு சிறப்புப் புன்னகை என்றும் பொருள். காமேசா என்பது சிவன் . லலிதை சிவனின் இடது தொடையில் அமர்ந்திருக்கும் போது , அவர்கள் காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார்கள் . இந்த வடிவம் அவர்களின் அர்த்தநாரீஸ்வர வடிவத்திலிருந்து வேறுபட்டது . லலிதையின் அந்த அழகிய விசேஷப் புன்னகையில் மூழ்கியிருக்கிறார் சிவா .
No comments:
Post a Comment