எத்தனை முறை…..
பல்லவி
எத்தனை முறை உனைக்கண்டாலுமலுக்கவில்லை
அத்தனை அழகு நீ அதிலாவண்ய ராமா
அனுபல்லவி
நித்தமுமுன்னருளொன்றே வேண்டினேன்
உத்தமனே கேசவனே உலகளந்தபெருமாளே
சரணம்
கத்தும் கடலலைமேல் துயிலும் நாராயணனே
வித்தர் ஞானியர் முனிவர்கள் போற்றும்
சத்திய சீலனே ஜானகி நாயகனே
முத்தொழில் புரிந்திடும் பரம்பொருளும் நீயே
No comments:
Post a Comment