கமலக்கண்ணனே …….
பல்லவி
கமலக்கண்ணனே திவேங்கடமுடையோனே
அமலனாதிபிரானே கமலப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
கமலாசனனும் உமையவள் நாதனும்
அமரேந்திரனுமனைவரும் வணங்கும்
சரணம்
கமலமலர் பூத்தது போல் காட்சி தரும் வேங்கடவா
கமலம்தனை திருமார்பில் சூடிய கேசவனே
கமலநாபனே கமலக்கண்ணனே
அமரர் பணிந்தேத்தும் திருமலை வாசனே
No comments:
Post a Comment