மாடு மீதேறி……
பல்லவி
மாடு மீதேறி பவனிவரும்
தோடுடைய செவியனை சிவனைத்துதித்தேன்
அனுபல்லவி
காடுதனில் திரியும் சுடலைமாடனை
வீடு பேரளிக்கும் கேசவன் நேசனை
சரணம்
ஓடுதனைக் கையிலேந்தும் கபாலீச்வரனை
ஆடும் நடராஜனைப் பொன்னம்பலவாணனை
ஈடிணையில்லாத கயிலைவாசனை
பாடும் எனக்கருள வேண்டுமென வேண்டி
No comments:
Post a Comment