ஞானப்பிரசூன்னாம்பிகை…..
பல்லவி
ஞானப்பிரசூன்னாம்பிகையின் மலர்த்தாள் பணிந்தேன்
வான் புகழ் கொண்ட காளத்தீசனுடனுறை
அனுபல்லவி
வானும் புவியுமளந்த கேசவன் சோதரி
ஊனம் களைந்தென் மன இருள் நீக்கும்
சரணம்
கானுறை முனிவரும் வானுறை தேவரும்
ஏனைய தெய்வங்களனைவரும் வணங்கிடும்
கூனல் பிறையணிந்த அகிலாண்டேச்வரி
தேனார் மொழியாள் திரிபுரசுந்தரி
விசுக்தி சக்கரத்தில் தங்கப்பாவாடையுடன்
பசுபதிநாதனெனும் சிவனுடனமர்ந்திருக்கும்
பார்வதி தேவி பர்வத குமாரி
பார் போற்றும் ஶ்ரீராஜராஜேச்வரி