பரமக்ருபாகரி.....
பல்லவி
பரமக்ருபாகரி ஆதிபராசக்தி
அரனயனரி பணி மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
வரம் தரும் கரமும் அபய கரமும் நீட்டும்
திரிபுரசுந்தரி கேசவன் சோதரி
சரணம்
மரணம் பிறப்பெனும் மாயச்சுழலகல
சரணகமலங்களைப் பற்றித் துதித்தேன்
நரர்சுரர் பணிந்தேத்தும் அகிலாண்டேஸ்வரி
பரம்பொருள் நீயே பார் புகழும் மாயே
No comments:
Post a Comment