பச்சைவண்ணனை....
பல்லவி
பச்சைவண்ணனை பவளவாயனை
மெச்சித்துதித்தேன் மேனிசிலிர்த்தேன்
அனுபல்லவி
இச்சைகள் பூர்த்தி செய்யும் தேவாதிதேவனை
நச்சரவணை துயிலும் திருநாராயணனை
சரணம்
அச்சுதா கேசவா என்றவன் நாமம்தனை
உச்சரித்தாலும் போதும் நாவார என்றும்
அச்சம் துயர் பிணி அனைத்தும் விலகுமென்ற
நிச்சயமறிந்து கொண்டு கச்சிமாநகருள்ளானை
No comments:
Post a Comment