கள்வனய்........
பல்லவி
கள்வனாய்க் காமகோட்டத்துள்
நின்றானை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
அள்ளக்குறையாத கருணைவள்ளலை
கார்வண்ணனை
சரணம்
பிள்ளைப்பிராயத்திலும் கள்ளத்தனம் செய்த கண்ணனை
வெள்ளையுள்ளம் கொண்ட ஶ்ரீவேணுகோபாலனை மாலனை
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகனை கேசவனை
பள்ளிகொண்ட பாற்கடல்வாசனைப் பரமபதநாதனை
தாளம் :சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment