இன்னல்கள் நீக்கிடும்......
பல்லவி
இன்னல்கள் நீக்கிடும் மனத்துக்கினியானை
சொன்னவண்ணம் செய்த பெருமாளைப் பணிந்தேன்
அனுபல்லவி
பன்னக சயனனை பாண்டவர் நேசனை
அன்னை கோமளவல்லி மனங்கவர் கேசவனை
சரணம்
நிலம் நீர் நெருப்பு நீள்விசும்பு காற்று
உலகனைத்தையும் தன்னுள்ளே வைத்து
நிலை நிறுத்தியும் படைத்தும் காத்தும்
அலகிலா விளையாட்டுடையானை
தாளம்:க.ஜம்பை
No comments:
Post a Comment