எண்கரத்தானை... (அட்டபுயகரம்)
பல்லவி
எண்கரத்தானை எட்டெழுத்தானை
கஜேந்திரவரதனை மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
கண்கவரழகனை ஆதிகேசவனை
விண்ணவர் போற்றும் தேவாதி தேவனை
சரணம்
சங்கும் சக்கரமும் வில்லம்பும் கேடயமும்
பங்கயமலரும் வாளும் கதையுமேந்தி
சிங்கமுகம் காட்டி எங்கும் நிறைந்திருக்கும்
மங்களமூர்த்தியை மதுசூதனனை
No comments:
Post a Comment