எனக்கொரு...
பல்லவி
எனக்கொரு பிறவி இனியும் வேண்டாம்
உனதருளாலே திருமாலே கேசவா
அனுபல்லவி
உனது திருவடி நிழலே சதமென
கனவிலும் நினைவிலுமுன் நாமமே துதித்தேன்
சரணம்
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனே
சனகாதி முனிவரும் நரர் சுரரும் நாரதரும்
தினம் பணிந்தேத்தும் திருப்பாற்கடலுறங்கும்
அனந்தசயனனே ஶ்ரீமன் நாராயணனே
துரிதம்
கேசவ மாதவ கோவிந்தா
ஶ்ரீதர முரளி ஜனார்த்தனா
No comments:
Post a Comment