இந்தளூர் பரிமளரங்கன்
பல்லவி
சந்ததம் உந்தன் மலர்ப் பதமே பணிந்தேன்
இந்தளூர்த் தலம் வளர் பரிமளரங்கனே
அனுபல்லவி
நிந்தை புரிந்திடும் நீச அரக்கருக்கும்
உன் தயை தந்திடும் தீனசரண்யனே
சரணம்
தந்தை சொல் காக்க வனம் சென்ற ராமனே
நந்தகுமாரனே நவநீதக் கண்ணனே
பந்தபாசம் பவவினைப் பயன் தொலைய
எந்தையே கேசவா எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment