உன்னைத் துதித்திடும்
பல்லவி
உன்னைத் துதித்திடும் என்னைக் காத்தருள
இன்னம் தாமதிப்பதேன் கேசவா
அனுபல்லவி
அன்னை செங்கமலம் அருகிருந்து போற்றும்
பன்னக சயனனே பரம தயாளனே
சரணம்
முன்னமொரு கரிக்கபயம் அளித்ததுவும்
பின்னொருநாள் காரிகையின் மானம் காத்ததுவும்
சொன்னவண்ணம் பக்தருக்கு செய்ததெல்லாம் கதையோ
மன்னு புகழ் மாதவனே மனமிரங்கி அருள்வாயே
No comments:
Post a Comment