கதி நீயனவே......
பல்லவி
கதி நீயெனவே பதமலர் பணிந்தேன்
இதமுடன் எனையே ஆண்டருள்வாயே
அனுபல்லவி
நிதி தரும் திருமகள் மனம் கவர்ந்தவனே
மதிமுகத்தவனே மாயக் கண்ணனே
சரணம்
விதம் விதமாய்த் தோன்றும் சொந்தங்களும் பந்தங்களும்
சதமல்ல நிலையல்ல இவ்வுலகில் உந்தன்
பதமொன்றே சதமென்று அறிந்த பின்னாலே
மதுசூதனே மாதவனே கேசவனே
No comments:
Post a Comment