சும்மாயிருந்தால்..
பல்லவி
சும்மாயிருந்தால் நானென்ன செய்வேன்
எம்மானே கேசவா எனக்கருளாமல் நீ
அனுபல்லவி
இம்மாநிலம் போற்றும் தேவாதி தேவனே
நம்மாழ்வார் பாடிப் பரவிய பரமனே
சரணம்
பெம்மான் சிவனும் பிரமனும் நாரதரும்
உம்பரனைவரும் கரம் பணிந்தேத்தும்
நம்பெருமாளே நாராயணனே
நம்பித்துதித்தேன் ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment