ஓ ஜகந்நாதா.....
பல்லவி
திருநிறை மார்பனே ஓ ஜகந்நாதா
கருணை புரிந்தெனைக் காத்தருள்வாயே
அனுபல்லவி
அருமறைகள் இதிகாச புராணங்கள் போற்றும்
பெருமைக்குரியவனே மாதவனே கேசவனே
சரணம்
ஒரு நாளும் உனது திருநாமம் உரைத்திலேன்
பெருமைகளை உன்புகழை மனத்தில் நினைத்திலேன்
கருமவினைப் பயனால் விதியால் கட்டுண்டேன்
திருந்தி மனம் வருந்தி உனையே சரணடைந்தேன்