பாரில் உனையன்றி….
பல்லவி
பாரில் உனையன்றி தாயே பராசக்தி
வேறு யார் துணையெனக்கு பராசக்தி
அனுபல்லவி
நேரில் நின்றுனைத்துதித்தேன் பராசக்தி
கோரிக்கை ஏற்றிடுவாய் தாயே பராசக்தி
சரணம்
மாரியே பராசக்தி மகிடனை
வதைத்தவளே
சேரிடமறியாமல் சேர்ந்து தீச்செயல் பல
புரிந்தேன்
ஆறுதல் தந்தெனையே ஆண்டருள்வாய்
தாயே
யாருக்கும் தீமை செய்யா வாழ்வெனக்
கருள்வாயே
கற்ற கல்வி பெற்ற செல்வம் எதுவும்
சதமல்ல
சுற்றம் சுகமெல்லாம் துறந்து உன்னைச்
சரணடைந்தேன்
பற்றற்ற நிலை பெறவே தாயே பராசக்தி
உற்ற துணை நீயே சென்னகேசவன்
சோதரியே
*****
ॐ दाशवदनाय विद्महे
ज्वामाळायाई धीमही
तन्नो परशक्ति प्रचोदयात् ॥
நாம் பத்துத் திசைகளிலும் இருப்பவளை அறிந்துகொள்வோம்.
ஒளிரும் மாலை அணிந்தவளைத் தியானிப்போம்.
அந்தப் பராசக்தி எங்கள் புத்தியை/அறிவை ஒளிரச் செய்யட்டும்.
No comments:
Post a Comment