சாமிநாதன் எனை…..
பல்லவி
சாமிநாதன் எனைக் காத்தருள வேண்டும்
வள்ளி மணாளன் வேலாயுதன் சிங்காரவேலன்
துரிதம்
பாமரர் பண்டிதர் நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்
பாமகள் பூமகள் சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காமனை எரித்த சிவன் மகன் கார்த்திகேயன்
தாமரை நாபன் கேசவனின் அன்பு மருமகன்
சரணம்
பூமிநாதன் வாமத்திலமர்ந்திருக்கும்
காமேச்வரி மலைமகள் கொஞ்சும் குமரன்
மாமறைக்குப் பொருள் சொன்ன சிவகுமரன்
பாமரரும் பண்டிதரும் வணங்கும் தமிழ்க்கடவுள்
No comments:
Post a Comment