அண்ணாமலையார் அகத்துக் கினியாளே
உண்ணாமுலையே உமையாளே- நண்ணா
நினைதோறும் போற்றிசெய நின்னடியார் உண்ண
மனைதோறுஞ் சோறு கொண்டு வா
அம்மா பசிக்குதுனு சொன்ன உடனே எதாது ஒரு வகைல சாப்பாட்டு தட்டோட ஓடி வந்து நிப்பா எங்க அபீதகுசாம்பா 🙏
குரு நமச்சிவாயர் மட்டுமில்ல நாமும் கூட அபீதகுசாம்பா கிட்ட பசிக்குதுனு கேட்டா, சாப்பாடே கிடைக்காது அப்டிங்குற எடத்துல கூட சாப்பாட்டு தட்டோட வந்து பசியாத்திட்டு போவா 😭 அவ்யாஜ கருணாமூர்த்தி 😘
#பாலாம்பிகே_சரணம்
நினைத்துத் துதித்தால்…..
பல்லவி
நினைத்துத் துதித்தால் அமுதளித்திடுவாள்
அனைத்துமானவள் அன்னபூரணி
அனுபல்லவி
வினைப்பயன் களைந்திடும் கேசவன் சோதரி
சுனை நீராய்ச் சுரக்கும் கருணைக்கடலவள்
சரணம்
தனை நினைந்தோர்க்கு தயவளிக்கும் தாயவள்
தினையளவு துதித்தாலும் பனையளவு பயன் தருவாள்
காரணம் எதுவுமில்லாமல் கருணைமழை பொழிபவள்
நாரணி நான்முகி உண்ணமுலையவள்
No comments:
Post a Comment