Monday, 27 May 2024

மகமாயித் தாயே……

 தாய் இரங்கா விடில்,சேய் உயிர் வாழுமோ?

சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ மகமாயி

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது,

தாழ்ந்த நிலையிலும் தர்மம் மாறாது, உன் நினைவோடு

இவ்வையகத்தில் வாழ்ந்திட வரம் தந்தருள் தாயே மகமாயி ....



                            மகமாயித் தாயே……


                                பல்லவி

                   மகமாயித் தாயே நீ இரங்காவிடில்

                   மகன் நானிவ்வுலகில்  உயிர் வாழ்வதெங்ஙனம்

                              அனுபல்லவி

                   சகல உலகிற்கும் நீ தாயல்லவோ

                   அகிலலோக நாயகியே கேசவன் சோதரி

                                  சரணம்

                  அகந்தை மமதையென் தலைக்கேறாது 

                  தகவிலாச் செயலேதும் நான் புரியாமல்

                  மகிழ்வுடனிவ்வுலகில் வாழ்ந்திடச் செய்யவே

                  சுகபாணி அருள்வாமி அகிலாண்டேச்வரி

No comments:

Post a Comment