எத்தனை முறை சொன்னாலும்…..
பல்லவி
எத்தனை முறை சொன்னாலும் ஶ்ரீராமா உன்நாமம்
தித்திக்குதே வாய் மனம் களிப்பெய்துதே
அனுபல்லவி
உத்மனே கேசவனே உனதருளாலன்றோ
இத்தரையில் அனைத்தும் இனிதே இயங்குவது
சரணம்
பத்தரை மாற்றுப் பசும்பொன்னே ரகுராமா
வித்தகர் வேதியர் போற்றும் தத்துவப்பொருளே
நித்திலத்தொத்தே தினகர குலவிளக்கே
சத்திய நாதனே அயோத்தியர் கோமானே
No comments:
Post a Comment