அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே
எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ
எண் தோள்களும் …….
பல்லவி
எண் தோள்களும் மூன்று கண்களும்
கொண்ட சிவனுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
மண்ணையுண்ட வாயன் கேசவன் நேசனே
பெண்ணணங்குக்கொரு பாதி ஈந்த ஈசனே
சரணம்
அன்றே எனதனைத்தையும் ஆட்கொண்ட
குன்றனைய சிவபெருமானே
நன்றோ தீதோ எது செய்த போதும்
என்றன் துணை நீயே கயிலாயவாசனே
No comments:
Post a Comment