பண்டனை வதைத்தவளே……
பல்லவி
பண்டனை வதைத்தவளே ஶ்ரீலலிதாம்பிகையே
முண்டகக்கண்ணியுனை தண்டனிட்டுப் பணிந்தேன்
அனுபல்லவி
புண்டரீகாக்ஷன் கேசவன் சோதரியே
அண்டசராச்சரங்களனைத்தையும் காப்பவளே
சரணம்
தண்மதிக் குளிர்ச்சியுடனெப்போதுமிருக்கும்
வெண்ணிலவுப் பிறையணிந்த ஈச்வரியே மாயே
எண்ணிய வண்ணமெலாம் வடிவெடுக்கும் தாயே
திண்ணமுடன் மயிலையில் எழுந்தருளிக் காட்சி தரும்
புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் தெரிபவளே
மண்ணிலுத்தித்துப் பல லீலைகள் புரிந்தவளே
எண்ணிலா லீலைகள் பல புரிந்தவளே
பண்ணிசைத்துப் பாடிப் பரவசித்துத் துதித்தேன்
No comments:
Post a Comment