மனத்துக்கினியானை……
பல்லவி
மனத்துக்கினியானை ஶ்ரீராமபிரானை
எனக்கருளவேண்டுமென தினம் துதித்தேன்
அனுபல்லவி
வனம் சென்று தந்தை சொல் காத்தவனை
அனந்தன் மீதுறங்கும் ஆதி கேசவனை
சரணம்
வினதையின் புதல்வனை வாகனமாய்க்கொண்டவனை
தனக்கொருவர் நிகரில்லா தயரதன் மைந்தனை
சனகாதி முனிவர்களும் தேவர்களும் துதிப்பவனை
தினகர குலத்தோனை திருவின் நாயகனை