“மாத்தியோசி கணபதி”
பல்லவி
தந்தையும் தாயுமே உலகமென்றுணர்த்திய
எந்தையே கணபதியே உந்தன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
விந்தையாய் சிந்தித்துப் புதிய வழி கண்டு
வெற்றிக்கனி பெற்ற வேழமுகத்தோனே
சரணம்
முந்தைய பழவினைப்பயன்களைக் களைந்திட
எந்தனுக்குதவிட சந்ததமுனைத்துதித்தேன்
சுந்தர வடிவுடைய கேசவன் மருகனே
தந்திமுகத்தோனே தயைபுரிவாயே
***********முதல் முதல் “ Out of box thinking” “ மாத்தி யோசி” சிந்தனையைத்
தோற்றுவித்தவர் விநாயக பெருமான்.
மாத்தி யோசி! வித்தியாசமாக சிந்தி! செல்லாத பாதையில் செல்!
இப்படி பல பேர் சொல்லிக் கேட்டாலும் நிறைய மனிதர்கள் பழக்கப்பட்ட
பாதையிலே சென்று, வழக்கமாகவே சிந்தித்து, வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.
கடின உழைப்பு மட்டும் போதுமா? அதோடு சற்று கெட்டிக்காரத்தனமான உழைப்பும் சேர்ந்தாலே வெற்றி கிடைக்கும்.
கடினமாக உழைத்த சுப்பிரமணியனுக்கு கோபமும், கோவணமும் மிஞ்சியது.
சற்று மாத்தி யோசித்த கணபதிக்கு மாங்கனி கிடைத்தது.!
No comments:
Post a Comment