சகலமும் நீயென.....
பல்லவி
சகலமும் நீயென உன் பதம் பணிந்தேன்
பகலவன் குலத்துதித்த ஶ்ரீராமா எனக்கருள்வாய்
அனுபல்லவி
இகபரமனைத்திலும் சுகமளிக்கும் கேசவனே
ககனமும் வானும் புவனமும் போற்றும்
சரணம்
சுகசனகாதியரும் தேவரும் இந்திரனும்
அகத்திய முனிவரும் கரம் பணிந்தேத்தும்
புகழ் மிகு ராகவனே தயரதன் மைந்தனே
புகலுனது தாமரைப் பதமெனத் துதித்து
No comments:
Post a Comment