என்றுமுன்.......
பல்லவி
என்றுமுன் திருவடி நிழலே போதும்
வென்று ராவணனின் கதை முடித்த ஜெயராமா
அனுபல்லவி
கன்றைப் பசு காப்பது போலெனைக் காக்கும் கேசவனே
அன்று மூவடியாலுலகளந்த வாமனனே
சரணம்
சென்று மிதிலைதனில் வில் வளைத்தொடித்து
அன்று ஜானகியை மணம் புரிந்த ரகுராமா
குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
இன்றுனை தினம் துதிக்கும் ஏழையேன் எனக்கு
No comments:
Post a Comment